• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய சீன படகு பரபரப்பு!

ByA.Tamilselvan

Jul 25, 2022

வேதாரண்யம் அருகே சீன படகு கரை ஒதுங்கியதால் உளவாளிகள் ஊடுவலா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமம் முணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கிய கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி.கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்(நாகை), , தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கி கிடந்த ரப்பர் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த படகை வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் பறிமுதல் செய்தனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து யாராவது இந்த படகில் வந்தார்களா? அல்லது சீனாவை சேர்ந்த உளவாளிகள் வந்தார்களா? என பல்வேறு கோணங்கணில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 5 சீன உளவாளிகள் கடல்வழியாக ஊடுருவலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வேதாரண்யம் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி இருப்பது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.