• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

இன்று முதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

Byகாயத்ரி

Jul 18, 2022

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதியான இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என தெரிகிறது.