• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

ஸ்பீல் பெர்க்கின் தனித்துவம், உச்சபட்ச வணிக சாத்தியமுள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் சின்னச்சின்ன ஐடியாக்களை திரைப்படமாக்குவது தான். அப்படி அவர் இயக்கியிருக்கும் புதிய படம் வெஸ்ட் சைட் ஸ்டோரி.

நியூயார்க்கின் பிராட்வே தியேட்டர்ஸுக்காக ஆர்தர் லாரன்ட்ஸ் 1957 இல் எழுதிய இசை நாடகம் வெஸ்ட் சைட் ஸ்டோரி. 700 முறைக்கு மேல் அரங்கேறிய இந்த நாடகத்தை ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜுலியட் பாதிப்பில் எழுதியிருந்தார்.

ஆர்தரின் புத்தகத்தை தழுவி வெஸ்ட் சைட் ஸ்டோரியை ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ளார்.2019 ஜனவரியிலே படப்பிடிப்பை தொடங்கி, இரண்டே மாதத்தில் மொத்த படப்பிடிப்பயும் முடித்தார் ஸ்பீல் பெர்க்.இரண்டு வருடங்கள் முன்பே படப்பிடிப்பு நிறைவடைந்த படத்தினை வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

இந்தியாவில் டிஸ்னி இந்தியா படத்தை விநியோகிக்கிறது. அதே டிசம்பர் 10 இந்தியாவிலும் படம் திரைக்கு வருகிறது.