• Fri. May 3rd, 2024

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார நிகழ்ச்சி

Byvignesh.P

Jul 2, 2022

தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.


நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தற்போதைய சூழலில் இந்துக்கள் தங்களது உரிமைகளை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர்.அதனை மீட்பதற்காக கடந்த 28ஆம் தேதி திருச்செந்தூரில் துவங்கி வருகின்ற 31ஆம் தேதி சென்னையில் முடிவுறும் வகையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக தேனியிலும் நடைபெற்றது. அதிமுகவில் நடைபெறுகின்ற உக்கட்சி பூசல் குறித்து கேள்வி எழுப்புகையில் இபிஎஸ்,ஓபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் . ஒன்றாக இருந்தால் கட்சி பலம் வாழ்ந்ததாக இருக்கும் ., தற்போதைய திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவும் இந்துத்துவாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது . தற்போது வரை தமிழகத்தில் 118 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது.
இந்த திராவிட மாடல் ஆட்சி காலத்தில் தான் என்றும் மசூதி மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களின் சர்ச் கட்டிடங்களை தொடுவதற்கு கூட இந்த ஆட்சி பயப்படுகிறது . இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதால் திமுக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது . கண்ணகி கோவில் இழந்த உரிமையை மீட்க கோரி தமிழக முதல்வரிடமும் மத்திய அரசிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், விரைவில் கண்ணகி கோயில் உரிமைகள் அனைத்தும் மத்திய அரசு திரும்ப பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது .கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக கேள்வி எழுப்புகையில், ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சேமித்து வைத்த சர்க்கரை அனைத்தும் இரும்பு தின்றுவிட்டது என்பது போல தற்போதைய தங்கமும் மாறிவிடும் எனவே தங்கத்தை உருக்கும் திட்டத்திற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது . திமுக அரசு திராவிட மாடல் அரசு என்று சொல்லி இந்து விரோதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றும் பேசினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட தேனி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *