• Mon. Apr 29th, 2024

வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு

By

Sep 10, 2021 ,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடைப்பட்ட நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‌இதனை அடுத்து ஆண்டிபட்டி மற்றும் அதன் கிராம பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

‌மேலும், சீனிவாச நகர், ராஜகோபாலன்பட்டி ,மாயாண்டி பட்டி ,கொத்தப்பட்டி ,கணேசபுரம் , ஜி.உசிலம்பட்டி ,ஆதிபராசக்தி நகர்,பூக்காரத் தெரு ஆகிய இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ் பி எம்.செல்வம் தலைமையில், விநாயகப் பெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *