• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விக்ரம் படத்திற்கு 60 டிக்கெட்டுகள் வாங்கி இதய விடிவில் போஸ் கொடுத்த ரசிகர்…

Byகாயத்ரி

Jun 2, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இதனால் பலரும் டிக்கெட் எடுத்துவிட்டு நான் முதல் நாள் முதல் காட்சிக்கு போறேன் என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை விற்று தீர்ந்துவிட்டது.

இந்த விக்ரம் படம் ரிலீஸீக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரா என்கின்றவர் விக்ரம் படத்திற்கான 60 டிக்கெட்கள் வாங்கியிருக்கிறார். அதனை இதய வடிவில் அலங்கரித்து படுத்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.