• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெடித்து சிதறும் எட்னா எரிமலை…

Byகாயத்ரி

May 23, 2022

இத்தாலி நாட்டில் இருக்கும் எட்னா எரிமலையிலிருந்து, நெருப்பு குழம்பு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கண்டத்திலேயே மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய எட்னா எரிமலையானது, இத்தாலியில் இருக்கும் சிசிலி நகரத்தில் இருக்கிறது. இந்த எரிமலையானது பல தடவை இதற்கு முன்பு வெடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளமாக இருக்கக்கூடிய இந்த எரிமலை கடந்த மாத கடைசியில் வெடித்தது. இந்நிலையில் அதிலிருந்து லாவா என்ற நெருப்பு குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த பகுதியை சேர்ந்த அனைத்து மக்களையும் அதிகாரிகள் வெளியேற்றி விட்டார்கள். இரவு சமயங்களில் அந்த எரிமலையிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறிக் கொண்டிருப்பதை வெகு தொலைவில் இருந்து கொண்டு சுற்றுலா பயணிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், எரிமலை தொடர்ந்து வெடித்து கொண்டிருப்பதால், அந்த பகுதிக்கு செல்வதற்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது.