• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எங்களிடம் டாலர் இல்லை. ரூபாயும் இல்லை-இலங்கை பிரதமரின் அதிர்ச்சி அறிவிப்பு

ByA.Tamilselvan

May 20, 2022

இலங்கையில் ஆகஸ்டு மாதம் முதல் உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ளது.மேலும்எங்களிடம் டாலரும்இல்லை,ரூபாயும் இல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பொதுமக்கள் பாடாதபாடு பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.
பெட்ரோல், டீசல், சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காக பொதுமக்கள் நீண்ட தூரம் கால் கடுக்க காத்து கிடக்கின்றனர் .
இதையடுத்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். போரட்டம் காரணமாக இலங்கையில் இன்னும் அசாதாரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா செய்தபிறகு புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்கே இலங்கை பொருளாதாரத்தை மீட்க சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அளித்துள்ள பேட்டியில்….
நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது.நாட்டின் இப்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் ஆகும். நாங்கள் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டோம். இலங்கையில் ஒரு போதும் இது போன்ற நிலை இருந்தது இல்லை.எங்களிடம் டாலர் இல்லை. ரூபாயும் இல்லை. நாங்கள் நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.