• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஊட்டி மலர் கண்காட்சி .. தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்..

Byகாயத்ரி

May 20, 2022

நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் தொடங்குகிறது உதகை மலர் கண்காட்சி. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளன.

35 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள், வேளாண் பல்கலைகழக முகப்பு தோற்றங்கள், பழங்குடியினர், சிலைகள், கார்டூன் வடிவங்கள், அலங்கார வளைவு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.