• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டான் படத்தை பார்த்த ரஜினி கண்ணீர்…

Byகாயத்ரி

May 19, 2022

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை டான் திரைப்படம் ரிலீசானது. காலை 4 மணிக்கே ரசிகர்கள் திரையரங்கை சூழ்ந்து சிவகார்த்திகேயனின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து வெடி வெடித்து திருவிழா போல் கொண்டாடினர். இதை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு ரசிகர்களுடன் சேர்ந்து டான் திரைப்படத்தை பார்த்தனர். இந்நிலையில் டான் படத்தை பார்த்த பிறகு, படக்குழுவினருக்கு போனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினார். அப்போது படத்தின் கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.