• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெண்கள் மீது யாரேனும் கை வைத்தால்… கையை உடைத்துவிடுவேன்..

Byகாயத்ரி

May 18, 2022

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேக்கு பயணம் மேற்கொண்ட போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் மீது பாஜகவை சேர்ந்த வர்கள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே ஜல்கான் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர், இனிமேல் மகாராஷ்ட்ராவில் ஒரு பெண்ணை அடிக்க யாரேனும் கை ஓங்கினால் நானே அங்கு சென்று அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வேன். அவரது கையை உடைத்து அவரிடம் ஒப்படைப்பேன் என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஒரு ஆண் ஒரு பெண்ணை தாக்குவது மராத்தி கலாச்சாரத்திற்கு எதிரானது. மேலும் இந்த மாநிலத்தை சேர்ந்த ஷாஹீ மகாராஜ், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி மன்னர் ஆகியோர்கள் பெண்களை மதித்தவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.