• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிறார் மோடி -சோனியா காந்தி பேச்சு

ByA.Tamilselvan

May 14, 2022

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாட்டில் அரசியல் எதிரிகளை மோடி அச்சுறுத்தி வருகிறார் என கடுமையாக விமர்சித்து சோனியாகாந்தி பேச்சு
தொடர்தோல்விகளை சந்தித்துவரும் காங்கிரஸ்கட்சியினை புனரமைக்கும் விதமாக நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு (சிந்தனை அமர்வு) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று தொடங்கியது. தொடக்க நாளான இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும். இந்த சிந்தனை அமர்வானது, நமக்கு முன்னால் உள்ள பல சவால்களைப் பற்றி ஆலோசிக்கவும், அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக, தேசிய பிரச்சனைகள் மற்றும் கட்சி அமைப்பு பற்றிய அர்த்தமுள்ள சுய சுயபரிசோதனை குறித்து விவாதிக்கப்படவேண்டும்.
கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும். கட்சி நமக்கு நிறைய கொடுத்துள்ளது, அதை திருப்பி செலுத்த வேண்டிய நேரம் இது. கட்சியில் மாற்றங்கள் செய்யவேண்டியது காலத்தின் தேவை. இதற்கு நாம் நமது செயல்முறையை மாற்ற வேண்டும்.
பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடி பயன்படுத்தும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்ற முழக்கத்தின் உண்மையான அர்த்தம், சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவதும், அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதும் என்பது தெளிவாகிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.