• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

Byகாயத்ரி

May 13, 2022

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் திறந்து வைத்தார்.

சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருந்து பரங்கிமலை, வேளச்சேரி, தாம்பரம், சோலைநல்லூர் போன்ற பல பகுதிகள் முக்கிய பகுதிகள் செல்கின்றது. இந்த பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல்கள் அதிகளவில் ஏற்படுகின்றது. இவற்றை குறைப்பதற்காக 2016 ஆம் ஆண்டு இரண்டு மேம்பாலங்கள் அதாவது வேளச்சேரியில் இருந்து பள்ளிகரணை, தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் வழியாக செல்வதற்கு ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பள்ளிக்கரணையில் இருந்து தாம்பரம் செல்லும் மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது. தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் மேம்பாலம் சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளம் 11 மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில், இதனை இன்று முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.