• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கல்…

Byகாயத்ரி

May 12, 2022

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம். தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படியும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் படியும் அக்னி நட்சத்திர கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை திருக்கோவில் துணை ஆணையர் செயலாளர் அலுவலர் திரு. நா.சுரேஷ் அவர்கள் இன்று 12.5.2022 துவக்கி வைக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பங்கேற்க பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இன்று முதல் கோடை வெயிலின் தாக்கம் குறையும் வரை இலவச நீர்மோர் திருக்கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும்.