• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரீல்ஸ் மூலம் பிரபலமான கிலி பால் மீது தாக்குதல்… பிரபலம்-னா சும்மாவா .. எவன் பாத்த வேலையோ..?

Byகாயத்ரி

May 3, 2022

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா இருக்கும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தான் கிலி பால் (kili paul), நீமா (Neema).. இவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து நடனம்மாடியும், நடித்தும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவருக்கும், இன்ஸ்டாகிராம் கிளி பால் (kili_paul) எனும் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் இந்த இன்ஸ்டா பக்கத்தை சுமார் 83.5 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்த மாஸான சீனில் நடித்து வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோ சமூகவத்தளத்தில் வைரலாக பரவியது.இவர்களின் நடிப்பு திறமையை பார்த்த இந்திய ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ உரையில் கிலி பாலை புகழ்ந்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கிலி பாலை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பந்தமே இல்லாமல் கிலி பாலை தாக்கியவர்கள் யார் என்ற குழப்பம் எல்லோரிடமும் நிலவி வருகிறது… பிரபலம் என்றாலே இதுதான் பிரச்சனை…