• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி- போலீசார் விசாரணை

ByA.Tamilselvan

May 2, 2022

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளிமாணவி அதிர்ச்சிமரணம்.மேலும் 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோழிக்கறியுடன் சிலபொருட்களைசேர்த்து தாயாரிக்கப்படும் சைனீஸ் வகை உணவுதான் ஷவர்மா.இந்த உணவு இளைஞர்களால் விரும்பி உண்ணப்படுகிறது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பஸ் நிலைய பகுதியில் ஷவர்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இது பிரபலமான உணவகம் என்பதால் எப்போதும் கூட்டம் இருக்கும்.இந்த உணவகத்தில் ஏராளமானோர் சிக்கன் ஷவர்மா வாங்கி சென்றனர். பலர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டனர்.
இதில் கரிவல்லூரை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் தேவநந்தா (வயது 16) என்ற சிறுமியும் ஷவர்மா வாங்கி சாப்பிட்டார். சாப்பிட்ட சில மணி நேரத்தில் தேவநந்தாவுக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவநந்தா சாப்பிட்ட உணவு காரணமாகவே அவருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி சிறுமி தேவநந்தா பரிதாபமாக இறந்தார்.தேவநந்தா பலியான சிறிது நேரத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினர்.
நேற்றிரவு வரை 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவருமே தேவநந்தா,ஷவர்மா சாப்பிட்ட அதே உணவகத்தில் சாப்பிட்டவர்கள் .
செருவத்தூர் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.