• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டீல் படம் தொடக்கவிழா

டுவென்டி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சினீ சேகர் தயாரித்து, இசையமைத்து, கதை எழுதி, இயக்கும் படம் ‘டீல்’.இந்தப் படத்தில் அதர்வா பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஷான்வி கதாநாயகியாக நடிக்கிறார். சாம்ஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். எஸ்.கிஷோர், சுதா,  பிரவ் மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷந்து மேப்பயூர் ஒளிப்பதிவை கையாளுகிறார். பி.சி.மோஹனன் படத் தொகுப்பு செய்கிறார். எம்.எல்.ஆனந்த் நடனம் அமைக்க, ஜாக்கி ஜான்சன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். சி.பாலசுப்பிரமணியன் இணை இயக்கம் செய்கிறார்.இயக்குநர் சுனீ சேகர் மலையாளத்தில் ‘நொம்பரம்’, ‘கிருஷ்ண யேட்சா’, ‘பென் மசாலா’ ஆகிய படங்களை இயக்கி, கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் விருதுகளை பெற்றுள்ளார்.இந்த ‘டீல்’ திரைப்படம் காமெடி, அடிதடி கலந்து, ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது. உழைக்காமல் சம்பாதித்து உயர நினைக்கும் ஒருவருக்கும், உழைத்து சம்பாதித்து, உயர  நினைக்கும் மற்றொருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் இந்த ‘டீல்’ படத்தின் கதை.இந்த ‘டீல்’ படத்தின் துவக்க விழா இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்வில் இயக்குநர் பேரரசு, நடிகர்கள் மன்சூர் அலிகான், சாம்ஸ், முத்துக்காளை, ‘சிசர்’ மனோகர், ‘காதல்’ சுகுமார், ‘வைகாசி’ ரவி, நடிகைகள் கிருஷ்ணா தேவி, ‘காதல்’ மல்லி, அகல்யா, சுதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.