கும்பகோணத்தில் கடந்த 18 ஆண்டுகளாக விவசாய மின் இணைப்பிற்காக, தமிழகம் முழுவதும் நான்கு லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில்,
மின் வாரிய அலுவலகம் முன்பாக ஏராளமான விவசாயிகள் பம்பு செட் உபகரணங்களுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகள் புதிய விவசாய மின் இணைப்பிற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், அந்த ஆண்டில் புதிதாக எத்தனை வேளாண் மின் இணைப்புகள் புதிதாக வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பு இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இப்படி 50ஆயிரம் புதிய மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த இலக்கு முழுமையாக எட்டப்படாமல் இன்றளவும் நிலுவையில் உள்ளது எனவும் நடப்பாண்டில் புதிய விவசாய மின் இணைப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வேளாண்நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனை நிறைவேற்ற வலியுறுத்தி கும்பகோணம் மின் வாரிய அலுவலகம் முன்பு, ஏராளமான விவசாயிகள் பம்பு செட் உபகரணங்களுடன் திரண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.













; ?>)
; ?>)
; ?>)