• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஓடும்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!சென்னையில் பரபரப்பு

By

Aug 31, 2021 ,

சென்னை கோயம்பேட்டிலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 100 அடி சாலையில் கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதைடுத்து காரை நிறுத்தியவுடன் காரின் முன்பக்கத்தில் திடீரென தீப்பற்ற தொடங்கியது.

 

இதனால் காரை ஓட்டி வந்த முகப்பேரை சேர்ந்த சில்வியா காரின் தீயை அணைக்க முயன்றார் . இருப்பினும் கட்டுபடுத்த முடியாத நிலையில் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். .

அங்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் 100 அடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.