• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீண்டும் இந்தியா வந்தடைந்த சோழர்கள் கால சிலைகள் …

Byகாயத்ரி

Apr 1, 2022

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட சோழர் கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் புராதாணமாக சிலைகள் பல வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த சிலைகளை கடத்துவதற்கு பல்வேறு கும்பல்கள் இருந்த நிலையில் அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவன் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். தற்சமயம் பல்வேறு நாடுகளில் உள்ள கடத்தப்பட்ட இந்தியாவின் சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் ஏல் பல்கலைகழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்தியாவிலிருந்து கடத்தி சென்று வைக்கப்பட்ட சோழர்கள் கால சிலைகளை இந்தியா மீட்டுள்ளது. சோழர் காலத்து நடனமாடும் சம்பந்தர் சிலை உட்பட 13 சிலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இவை சுபாஷ் கபூரால் கடத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.