• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் ரூ.2,406 ஆக விற்பனை

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406 ஆக விற்பனை செய்யப்படுகிறது . 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.965.50ஆக தொடர்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவு கச்சாஎண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்றைய தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து அடுத்தபடியாக வர்த்தக பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து சென்னையில் ரூ.2,406ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.அதே நேரத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.965.50க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டதால் இந்த முறை மாற்றம் செய்யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரவும் நிலையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல்களில் டீ, காபி, வடை, உணவுப்பொருட்கள் விலை உயரும் அச்சம் எழுந்துள்ளது.