• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மன்னன் ராஜராஜ சோழனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை..??

Byகாயத்ரி

Mar 22, 2022

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஆரணியில் இருந்து மக்களவை எம்பியாக தேர்வு செய்தவர் விஷ்ணுபிரசாத். இவர் காங்கிரஸை சேர்ந்தவர் என்பதும் இவர் இன்று மக்களவையில் பேசிய போது தமிழ் மன்னன் ராஜராஜ சோழனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி மும்பை துறைமுகத்திற்கு இராஜராஜசோழன் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…