• Tue. Apr 30th, 2024

பிரதமருக்கு சவால்விட்ட பிரபல இயக்குனர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரபல இயக்குனர் வினோத் காபிரி, குஜராத் பைல்ஸ் என்ற படத்தை எடுக்க தயார், அதை வெளியிட அனுமதி தரமுடியுமா என சவால் விட்டுள்ளார்.

காஷ்மீர் கலவரத்தில் அங்குள்ள இந்துக்கள் துரத்தப்பட்ட நிகழ்வை காஷ்மீர் பைல்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர். உண்மையை மேலோட்டமாக தூவி, ஐந்து முதல் எண்பது வயது வரையான அனைத்து முஸ்லீம்களும் மோசம் என்ற வெறுப்பு அரசியலை நிறுவும் இந்தப் படத்தை பிரதமரே முன்னின்று பிரமோட் செய்து வருவதாக இணையத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்துள்ளன. வரிச்சலுகை, படத்தைப் பார்க்க மாநிலம் தழுவிய விடுமுறை, காவல்துறையினர் படத்தைப் பார்க்க விடுப்பு என பாஜக ஆளும் மாநிலங்கள் காஷ்மீர் பைல்ஸ் படத்தை தங்களின் மத அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றன என விவாதங்கள் இணையத்தில் வெடித்துக் கொண்டிருக்க. பிரபல இயக்குனர் வினோம் காபிரி பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

குஜராத் பைல்ஸ் என்ற பெயரில் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், பிரதமரின் பங்களிப்பையும் உள்ளடக்கிய படத்தை எடுக்க நான் தயார். இது பற்றி நான் தயாரிப்பாளர்களிடமும் கலந்து பேசினேன். அவர்கள் தயார். ஆனால், படத்தை வெளியிட பிரதமர் அனுமதிப்பாரா என்று உறுதிமொழியை மட்டும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கோத்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். வெளிநாடுகளின் முன்னால் எந்த முகத்துடன் செல்வேன் என வாஜ்பாய் வருத்தப்பட்டார். அந்த கொடூரமான கொலைகளை படமாக எடுப்பது குறித்துதான் வினோத் இப்படியொரு சவாலை விடுத்துள்ளார்.

வினோத் இயக்கிய Can’t Take This Shit Anymore ஆவணப்படம் தேசிய விருதை வென்றது. அவரது முதல் சினிமாவான Miss Tanakpur Haazir பல விருதுகளை வென்றது. கொரோனா பெருந்தொற்றின் போது மக்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து சென்றதை 1232 Kms என்ற ஆவணப்படமாகவும் இவர் எடுத்துள்ளார் என்பது முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *