• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சூரியவம்சம் படப்பிடிப்பில் கோபப்பட்ட சரத்குமார்!

தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனர்களில் ஒருவர், விக்ரமன். இவர் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்ய வம்சம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்ய வம்சம் படத்தில் சரத்குமார் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்க ராதிகா, தேவயானி கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மணிவண்ணன், ஆனந்தராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ரமேஷ் கிருஷ்ணா, பிரியா ராமன், நிழல்கள் ரவி என பலர் நடித்திருந்தனர். குடும்பங்கள் கொண்டாடும், இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சூர்ய வம்சம் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை நடிகர் சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

அதாவது ஒருநாள் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கும் இடையேயான காட்சி படமாக்கப்பட்டபொழுது சரத்குமார் படப்பிடிப்புக்கு நேரமாகவே வந்து ஒப்பனைகள் செய்து கொண்டு தயார் நிலையில் இருந்துள்ளார். மேலும் தன்னுடைய ஷார்ட் தயாரானவுடன் கூறுங்கள் நான் வருகிறேன் எனவும் உதவி இயக்குனரிடம் கூறி அனுப்பியுள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததால் அதில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நடிகர் விக்ரமன் காட்சிக்கு தயாராகிவிட்டு ராதிகாவிடம் ஷாட் ரெடின்னு சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் கேர்ள் ஃப்ரெண்ட் கூட ஹீரோ கொஞ்சி பேசிகிட்டு இருக்காரு எனது சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில் சரத்குமார் இயக்குனர் விக்ரமனுக்கு பின்னாலே அதைக் கேட்டுக் கொண்டு நிற்கிறார்.

தான் எந்த தவறும் செய்யவில்லை படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து தயார் நிலையில் இருந்தும் தன்னுடைய ஷார்ட் ரெடி என சொன்னவுடன் பேசிக்கொண்டிருந்த அழைப்பை கூட வைத்து விட்டு உடனடியாக வந்தேன் ஆனால் விக்ரமன் இப்படி சொல்லி விட்டாரே என்ற கோபத்தில் இருந்த சரத்குமார் காட்சி படமாக்கப்பட்ட போது ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து விட்டு கட்டியிருந்த வேட்டியை கழட்டி வீசிவிட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினாராம். இதுவரை சூர்ய வம்சம் பட ப்பிடிப்பில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததா என்று பலரும் அறியாத தகவலை சரத்குமார் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.