• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேற லெவல் கூட்டணியில் தளபதி 66!

தளபதி 66 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளது. இதனால் படத்தை ஏப்ரல் 14 ல் ரிலீஸ் செய்யலாமா என சன் பிக்சர்ஸ் யோசித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லே, அபர்னாதாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படம் பற்றிய அப்டேட்களும் வெளிவர துவங்கி விட்டன. தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் இயக்கப்பட உள்ள இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தமான் இசையமைக்கிறார்.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாம். விரைவில் அதிகாரப்பூர்வமாக இதை படக்குழு வெளியிட உள்ளதாம். பிரகாஷ் ராஜ் முக்கிய ரோலில் நடிக்க, வில்லனாக தெலுங்கு ஹீரோ நானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து லேட்டஸ்ட் அப்டேட்டாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால் தளபதி 66 படத்திற்கு கார்த்திக் பழனி தான் ஒளிப்பதிவு செய்ய போகிறாராம். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களை ஆர்வத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று, கொண்டாட வைத்துள்ளது.