• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இரத்ததானம் செய்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆயுதப்படை காவலருக்கு எஸ்பி பாராட்டு….

Byadmin

Jul 16, 2021

தூத்துக்குடியில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு இரத்ததானம் செய்த ஆயுதப்படை காவலர் நாகராஜ் என்பவருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு உடனடியாக காவல்துறையினர் மூலம் இரத்த தானம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி தூத்துக்குடி ஆயுதப்படையில் பல வகை இரத்தப் பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் இரத்த தானம் செய்வதற்கு ஆர்வத்துடன் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணிற்கு அவசரமாக A+ குரூப் ரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்க வந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரானிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் ஆயுதப்படை 5வது படைபிரிவில் பணியாற்றிய வரும் காவலர் நாகராஜ் என்பவர் ஆர்வத்துடனும், உதவும் எண்ணத்துடனும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு இரத்த தானம் செய்தார்.

ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவிய ஆயுதப்படை காவலர் நாகராஜை மாவட்ட எஸ்பி  ஜெயக்குமார் பாராட்டி சான்று மற்றும் பழக்கூடை வழங்கி கௌரவித்தார். மேலும் இதுபோன்று அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் ஹலோ போலீஸ் எண் 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு உதவுதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.  இந்நிகழ்வின் போது ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணபிரான், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.