• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட வைரமுத்து!

சமீபகாலத்தில் இலங்கை தமிழர் பகுதியில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் சல்லியர்கள் என்கிறார் படத்தின் இயக்குநர் கிட்டு. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் கவனத்திற்கு உள்ளானவர் இயக்குநர் கிட்டு தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் கருணாஸ் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்தப்படத்தின் டீஸரை நேற்று மாலை ஆறு மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.

போர்க்களத்தில் காயம்பட்ட தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றி, போரில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவ பின்னணியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு-கருணாஸ்
இணை தயாரிப்பு -நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார்
இயக்கம் -கிட்டு
ஒளிப்பதிவு-சிபி சதாசிவம்
இசை -கென் & ஈஸ்வர்
படத்தொகுப்பு -சி,எம் இளங்கோவன்கலை இயக்குனர் முஜிபூர் ரஹ்மான்
ஆக்சன்-சரவெடி சரவணன் & பிரபாஹரன் வீரராஜ்
விஎப்எக்ஸ்-சதீஷ் சேகர்