• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தி.மு.க. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!..

By

Aug 20, 2021

தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


நெல்லையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். பின்னர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்துள்ளனர். கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம். இதுதான் தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனை. முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.