• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாக்கியலஷ்மி சீரியலில் தாறுமாறு ட்விஸ்ட்கள்!

விஜய் டிவியின் சீரியல்களில் அதிக ரசிகர்களை பெற்ற சீரியல், பாக்கியலஷ்மி.. தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படும் நிலையில், தொடர்ந்து ரசிகர்களை பரபரப்பிற்குள்ளாக்கும் வகையில் பல திருப்பங்கள் வரும் வாரத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

விஜய் டிவியின் பிரைம் ஸ்லாட்டில் வெளியாகி வருகிறது பாக்கியலஷ்மி தொடர். இந்தத் தொடரில் முன்னாள் காதலியுடனான நெருக்கம், 2வது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசை மற்றும் அதற்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யும் முடிவு என்று லீட் கதாபாத்திரத்தின் அடுத்தடுத்த மூவ்கள் சீரியலை மிகவும் பரபரப்பாக்கி வருகிறது.

தன்னுடைய காதலியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கோபி, தனது மனைவி பாக்கியலஷ்மியை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்குகிறார். என்ன விவரம் என்று தெரியாமல் கணவன்மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த விவாகரத்து பேப்பரில் பாக்கியலஷ்மியும் கையெழுத்து போடுகிறார். விஷயம் தெரியாமல் அவர் செய்யும் இந்த செயல் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து தனது காதலியை திருமணம் செய்யவிருக்கிறார் கோபி. அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக கதை நகரவுள்ளதாகவும், வரும் வாரத்தில் சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்டுகளை இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் கோபியின் அப்பா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவராலும் உண்மை வெளிப்படுத்த முடியாத நிலையில், பாக்கியாவிற்கு உண்மை தெரியவருமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கோபியின் திருமணம் நடைபெறுமா, நடைபெற்றால் பாக்கியலஷ்மியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் தொடர் நகரவுள்ளது