• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிரேம்ஜிக்கு வந்த விபரீத ஆசை!

தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெங்கட்பிரபு. அதனைத் தொடர்ந்து அவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் சிம்பு நடிப்பில் அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மன்மதலீலை. இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். சம்யுக்தா, ரியா சுமன், ஸ்ம்ரிதி வெங்கட் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு பிரேம் ஜி இசையமைத்துள்ளார். இப்படத்தின் கிளிம்பஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் லிப்லாக் முத்தக் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதை குறிப்பிட்டு பிரேம்ஜி மீம் ஒன்றை அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு டேக் செய்துள்ளார். அதில் அசோக் செல்வன் பிரேம் ஜியை பார்த்து இவனுக்கும் 2,3 கிஸ் சீன் வேணுமாம் என கூறுவது போல இருந்தது. இதற்கு அசோக் செல்வனும் சிரிப்பது போன்ற எமோஜியை வெளியிட்டுள்ளார்.