• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை!

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலையில் மின்சார ஊழியர்கள் குடும்பத்தார் மற்றும் மலைவாழ் மக்கள் என 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டுயானைகள் இங்கு வருவது வழக்கமாக உள்ளது!

இதை தடுக்கும் விதமாக வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இன்று மாலை குடியிருப்பு பகுதிக்கு ஒற்றை காட்டு யானை உலா வந்தது.

குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். கடந்த சில தினங்களாக, சின்னார் பதிமலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், கவி அருவி,வால்பாறை சாலை பகுதிகளில் நடமாட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.