• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் அருணாசல ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்!

விருதுநகர் மாவட்டம் ஐக்கம்மாள்புரத்தில் அமைந்துள்ளது 400 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது! கோவிலில், மினாட்சி அம்பிகா சமேத அருணாசல ஈஸ்வரர் மற்றும் விக்ன விநாயகர், நடராஜர், சுப்பிரமணியர், நந்திகேவரர், கால பைரவர், நவக்கிரகம், ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும், மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது!

வருகின்ற புதன்கிழமை (09-02-2022 – தை மாதம் 27 ஆம் நாள்) காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மீனாட்சி அம்பிகா சமேத அருணாசல ஈஸ்வரர், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

8-2-2022 புதன்கிழமை, அதிகாலை 5.30 மணிக்கு மேல் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை பகா சங்கல்பம், புன்யாக வாசளம், கணபதி ஹோமம், பகா லட்சுமி ஹோமம், நவக்கிரசு ஹோமம், பூர்ணாஹிதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறும்

மாலையில், விக்னேஷ்வர பூஜை, புன்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிகுத் சங்கிரஹணம், அங்குராரர்ப்பணம், ரட்ஷாபந்தனம், கும்ப அலங்காரம். கலா ஆஹர்சனம், யாக சாலைப் பிரவேசம், வேதிக அர்ச்சனை, முதல் காட்ட யாகசாலை பூஜைகள், திரவிய சமர்ப்பணம், பூர்ணாஹீதி தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெறும்!

இரவு எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், நடைபெறும்.

9-2-2022 காலை 6 மணிக்கு மேல், யாகசாலை பூஜைகள் தொடங்கி தேவாரம் திருவாசகம் வாசிப்பு, கயிலாய வாத்தியம் இசைக்கப்படும்! விக்னேஷ்வர பூஜை, புன்யாக வாசனம், மூர்த்தி ரட்ஷாபந்தனம், வேதிகா அர்ச்சனை பர்ஷாஹீதி, (நாடி சந்தானம்) பஞ்ச கத்த ஹோமம், மூல மந்திர ஹோமம் மகள பூர்ணாஹிதி தீபாராதனை, , பாத்ரா தானம், கடம் புறப்பாடு, விமான மகா கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து மூலவர் மகா கும்பாபிஷேகம், விஷேச அபிஷேகம் அலங்கார தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறும்

காலை 9 மணிக்கு கலச பூஜையும், காலை 10.00 மணிக்கு மேல் சமபந்தி விருந்து நடைபெறும்! மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 100 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாட்டில் பங்கேற்க உள்ளனர்! இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கும் ஆன்மீகப் பெரியவர்களுக்கும் திருப்பணி விழாக்குழுவினர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

திருப்பணி விழாக்குழுவினர்:-
பிச்சைக்கனி சுவாமிகள்
தா. பாக்கியராஜ்
மூர்த்தி
பிச்சைக்கனி