• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய சட்ட உரிமை கழக தேனி மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கா.விலக்கு தனியார் மண்டபத்தில் அகில இந்திய சட்ட உரிமை கழக தேனி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.மாநில கழக அமைப்புச் செயலாளரும் தேனி மாவட்ட தலைவருமான கருவேல் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய சட்ட உரிமை கழக நிறுவனத்தலைவர் ராஜகுமார பாண்டியன் கலந்துகொண்டு மாவட்ட ஒன்றிய அமைப்பு நிர்வாகிகைளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

மாநில பொதுச் செயலாளர் பிரசன்ன பிரபு ,கொள்கைபரப்பு செயலாளர் ராமலிங்கம், திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் கார்த்திக்,  தேனி மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சதீஷ்குமார் ,செல்வகுமார், ஆனந்தன், பார்த்திபன், நாகராஜ் ,விஜயகாந்த் ,சேகர், முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

நிறுவனத் தலைவர் ராஜகுமார பாண்டியன் பேசும்போது, அகில இந்திய சட்ட உரிமை கழகம் நடைபெற உள்ள  நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பிஜேபி விளங்கி வருவதால் ,அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அதற்காக பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக பல்வேறு இலவச சட்ட உதவிகளை செய்து அவர்களுக்கு பிரச்சினை தீர்க்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் திவாகரன், பாண்டி செல்வம், ஆனந்த், தெய்வம், சந்திரசேகர் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.