• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஹேராம் படத்தை இந்தியில் தயாரிக்கும் ஷாரூக்கான்

கமல்ஹாசன் இயக்கத்தில் அவர் நடித்து 2000ஆம் ஆண்டுவெளியான படம் ஹேராம். இந்த படத்தில் கமலுடன் ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நாசர் உள்பட பலர் நடிக்க இந்தி நடிகர் ஷாருக்கானும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் சம்பளமே பெற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஹேராம் படம் வெளியாகி 22 வருடங்களுக்கு பிறகு அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து, ஷாருக்கான் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது அதற்காக இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அவர் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள். ஏற்கனவே ஹேராம் படம் இந்தியிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.