• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இணையத்தில் வைரலாகும் தனுஷ் மகனின் பதில்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் தற்போது தங்களது விவாகரத்து முடிவினை அறிவித்துள்ளனர்!

இவர்கள் இருவருக்கும் 15 வயதில் யாத்ரா என்ற மகனும் 11 வயதில் லிங்கா என்ற மகனும் உள்ளனர். இவர்களின் விவாகரத்து காரணமாக மூத்த மகனிடம், விவாகரத்துக்குப் பிறகு யாருடன் இருக்க போகிறீர்கள் அம்மாவா அப்பாவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அவர் மிகவும் புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளார். அதாவது என் அம்மாவிடம் சென்று நீங்கள் அப்பாவுடன் இருக்கப் போகிறீர்களா அம்மாவுடன் இருக்கப் போகிறீர்களா என்று கேட்டால் அவர் என்ன சொல்வார்? அப்பாவிடம் இதே கேள்வியை கேட்டால் அவர் என்ன செய்வார் என கேள்வி கேட்டவர்களை திருப்பி கேட்டு திக்குமுக்காட வைத்துள்ளார்.

முன்னதாக, தன்னுடைய மூத்த பேரன் மிகவும் புத்திசாலி, அவன் கேட்கும் சில கேள்விகளுக்கு என்னால் கூட சில நேரங்களில் பதில் சொல்ல முடியாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.