• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவாகரத்தை காட்டிலும் பிரசவவலி கடுமையானது சமந்தா நெகிழ்ச்சி

தனுஷ்-சௌந்தர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தபின்பு ஊடகங்களின் கவனம் சமந்தா – நாகசைதன்யா சம்பந்தமான செய்திகளை ஓரங்கட்டி விட்டது . இருந்த போதிலும் அவர்களது விவாகரத்து விவகாரம் வெளியான போது அதற்கான காரணங்களில் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்பியதால் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து வந்தார்.

அதன் காரணமாகவே அவருக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர் என பிரதானமாக கூறப்பட்டது.


இந்த நிலையில் தற்போது பிரசவம் குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில்உலகிலேயே மிகப்பெரிய வலி பிரசவம் தான். அந்த வலியை ஒரு பெண் தாங்கிக் கொண்டு குழந்தை பெறுகிறாள்.

ஆனால் அந்த குழந்தையை பார்த்தவுடன் அவளது வலிகள் எல்லாம் மறந்து முகத்தில் சிரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.

இதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.இதையடுத்து தாய்மையைப் பற்றி இத்தனை அருமையாக புரிந்து வைத்துள்ள சமந்தா எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்திருக்க முடியும் என்று அவருக்கு ஆதரவான கருத்துகள் வெளியாகி வருகிறது.