• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இணையத்தை கலக்கும் “டேவிட் புஷ்பா”!

புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், பல கிரிக்கெட் வீரர்களும் “ஸ்ரீ வள்ளி” பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர்…

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான திரைப்படம், ‘புஷ்பா’.. ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. ஸ்ரீ வள்ளி பாடல், ராஷ்மிகா அசத்தலாக ஆட்டம் போட்ட வா சாமி பாடல், சமந்தாவின் ஐட்டம் பாடல் என ஒவ்வொரு பாட்டும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடலுக்கும் திரைப்பிரபலங்கள் ரசித்து ரசித்து ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு, தான் ஆடுவதைப்போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புஷ்பா படத்தில் வரும் பாடலில் அல்லு அர்ஜுன் முகத்திற்கு பதிலாக தன் முகத்தை மாஃபிங் செய்து வெளியிட்ட வீடியோவிற்கு பல கிரிகெட் வீரர்கள் வேடிக்கையாக தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக, அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த அல வைகுண்ட புரம் லோ திரைப்படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.