• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஜய்சேதுபதி வெளியிட்ட “கரா” முதல் பார்வை

பவானி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கரா’.

இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநரான அவதார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு – வில்லியம்ஸ், இசை – அச்சு ராஜாமணி, படத் தொகுப்பு – கிரேசன், கலை இயக்கம் – பி.எல்.தேவா, சண்டை இயக்கம் – ரவி, நடன இயக்கம் – பாலகுமார், ரேவதி, பாடல்கள் – மதுரை கவி, மக்கள் தொடர்பு – நித்திஷ் ஸ்ரீராம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன்.

அந்தப் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பின் காரணமாக தான் நடிக்கும் இந்த ‘கரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட விஜய் சேதுபதியை அணுகினார் மகேந்திரன்.விஜய் சேதுபதியும் இன்று தனது படப்பிடிப்புத் தளத்தில் ‘கரா’ படத்தின் குழுவினரை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்.