• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாஷிங்டனில் முகக்கவசம், தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு

முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம் வரை முழக்கம் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. முகக்கவசம் அணிவது குறித்து அமெரிக்காவில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அதிபர் ஜோ பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சி முகக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்துகிறது. அதே நேரம் குடியரசுக்கட்சி முன்னிலையில் இருக்கும் பல மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படவில்லை.

அதே நேரம் ஜனநாயக கட்சி ஆட்சியில் இருக்கும் கலிபோர்னியா போன்ற மாகணங்களில் உள்ளரங்கங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் தனிநபரின் விருப்பமாக இருக்கவேண்டும் கட்டாயமாக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தி மக்கள் பேரணி நடத்தினர்.