• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நாகசைதன்யாவை நினைத்து பெருமைப்பட்ட நாகர்ஜுனா

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும். 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூட்யூப் சேனல்களிலும் வெளியானது. காஸ்ட்யூம் டிசைனருடன் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சமந்தா கரு கலைப்பு செய்ததாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் சமந்தா.


ஆனால் நாக சைதன்யா தனது விவாகரத்து குறித்து எதுவும் பேச மல் இருந்தார். இந்நிலையில் நாக சைதன்யாவின் அப்பாவான நாகார்ஜூனா மகனின் விவாகரத்து குறித்து பேசியுள்ளார். பங்கர் ராஜு படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய நாகார்ஜூனா, விவாகரத்து விஷயத்தில் அவர் எப்படி அமைதியாக இருந்தார் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


அவர் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை. எல்லா தந்தையையும் போலவே நானும் அவரைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் நான் அவரைப் பற்றி கவலைப்படுவதை விட அவர் என்னைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார். அவர் என்னிடம், ‘நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, அப்பா? என்பார். நான், உன்னிடம் கேட்க வேண்டிய கேள்வி என்பேன்… என தெரிவித்துள்ளார்.


நாக சைதன்யாவும் தனது கடினமான சூழ்நிலையில் தனது குடும்பத்தினர் ஆதரவாக இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யா நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி, பங்கர் ராஜு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேநேரத்தில் பாலிவுட்டில் அமிர் கானுடன் லால் சிங் சட்டா படத்திலும் நடித்து வருகிறார் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.