• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம்!

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படும் என தமிழக மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாட்டுப்படகு, விசைப்படகுகள் உட்பட 105 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படவுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி முதல் பிப்ரவரி 11- ஆம் தேதி வரை மொத்தம் 105 படகுகளை இலங்கையில் ஏலம் விட அந்நாட்டு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில், இலங்கை அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி, தங்கள் படகுகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.