• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தனுஷ்- ரஜினிகாந்த்தின் நிறைவேறாத ஆசை

தனுஷும், ஐஸ்வர்யாவும் திருமண உறவில் இருந்து பிரிவதாக அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் அறிவித்திருக்கிறார்கள் இதை பற்றி விவாதிக்க வேண்டாம் என்று அவர்களே பிரிவு பற்றி அறிவித்தபோது குறிப்பிட்டிருக்கிறார்கள் இருந்தபோதிலும் சமூக வலைதளங்களில் இதைப்பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனுஷை அன்ஃபாலோ செய்து வருகிறார்கள்.தன் தலைவரான ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றை இயக்க வேண்டும். இல்லை அவருடன் சேர்ந்து ஒரேயொரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்டகால ஆசை.ரஜினியின் காலா படத்தை தனுஷ் தான் தயாரித்தார். அப்பொழுது கூட அதில் ஒரு காட்சியில் அவரால் நடிக்க முடியாமல் போனது. தலைவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது என்று தனுஷ் பல முறை தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது படத்தை தனுஷ் இயக்குவார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் விவாகரத்து அறிவிப்பை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்களோ, அதற்கு வாய்ப்பே இல்ல ராஜா என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது படத்தை தனுஷ் இயக்க, மகள்கள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பார்கள். அந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் ரஜினிகாந்த் என்று முன்பு தகவல் வெளியானது.அண்மையில் நடந்த தேசிய விருது விழாவில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. இருவரும் தங்கள் பதக்கங்களுடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்கள். அப்படி சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் யார் கும்மியடித்தது என்றே தெரியவில்லை என தனுஷ் ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்புகிறார்கள்.