• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குடும்ப பிரச்சினையில் சண்டையை தொடங்கிய ரஜினி – தனுஷ் ரசிகர்கள்

தமிழ்த் திரையுலகத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விவாகரத்து செய்தியை தனுஷ், ஐஸ்வர்யா நேற்று அறிவித்தனர். திரையுலகத்தினருக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் இந்தப் பிரிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பதால் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு சில ரசிகர்கள் தனுஷ் பற்றியும் விமர்சித்து கருத்துக்களைப் பதிவிட்டது, தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. அதனால், பதிலுக்கு அவர்களும் கருத்துக்களைப் பதிவிட காலை முதலே இருவரது ரசிகர்களுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவி வருகிறது.தற்போது தனுஷ் ரசிகர்கள் ‘We are with u Dhanush Anna, We Love Dhanush” என சில ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அது போல ரஜினி ரசிகர்கள் ‘Thalaiva” என ரஜினிக்கு ஆதரவாக ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.ரஜினிகாந்த், தனுஷ் இருவருமே இது தங்களது குடும்பப் பிரச்சினை, ரசிகர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தினால் மட்டுமே ரசிகர்கள் சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.