• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அனிருத் இசையமைக்கும் 25வது படம் காத்து வாக்குல ரெண்டு காதல்

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில்விஜய், அஜீத்குமார், சூர்யா, தனுஷ் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத் இதுவரை 24 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இந்த நிலையில் அவரது 25ஆவது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ளது.

இந்த 10 ஆண்டுகளில் தான் இசையமைத்த 25 படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 8 படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனிருத் இசையமைத்த 25ஆவது படம் காத்துவாக்குல ரெண்டு காதல் என்று தற்போது அப்படத்தை தயாரித்துள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.