• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் எப்போதும் ஏடாகூடமாக எதையாவது பேசி தன்மீது ஊடக வெளிச்சத்தை தக்கவைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர் இரண்டாவது திருமணம் அப்புறம் அது சரியாக வரவில்லை என விவாகரத்து, பிக்பாஸ் என பரபரப்பில் இருந்தவரை சினிமாவில் மீண்டும் நடிக்க வைத்தால் கல்லா கட்டலாம் என திட்டம் போட்டனர்.

சினிமாவில் காணாமல்போன பவர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க வைக்கப்பட்ட டார் மற்றொரு படத்தில் வில்லியாக நடிக்கிறார். இந்த நிலையில் காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் பாடலுக்கு ஆடி அதகளம் செய்துள்ளாராம்.

சண்டை இயக்குனர் தவசிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து’ என்கிற படத்திற்காகத்தான் கானா பாலா பாடிய பாடலுக்கு வனிதா ஆட்டம் போட்டுள்ளார். இதற்காக அவருக்கு பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.