• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடங்கிய உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 624 காளைகளும் 300 வீரர்களும் கலந்துகொண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை (ஜன.14) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தநிலையில் 7 சுற்றுகளுடன் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 24 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார். 19 காளைகளை அடக்கிய முருகன் இரண்டாம் இடத்தையும் 11 காளைகளை அடக்கிய பரத் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
முதல் பரிசு முதல்வர் ஸ்டாலின் சார்பாக காரும், இரண்டாவது பரிசு இருசக்கர வாகனமும், 3-வது பரிசாக பசுக்கன்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.