இதுதாண்டா போலீஸ் என 1990 களில் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அதிரடி கதாநாயனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர் தமிழ் சினிமா இவருக்கு கைக்கொடுக்கவில்லை ஆனால் மசாலா தெலுங்கு சினிமா இவரை தத்தெடுத்துக்கொண்டது இப்போதும் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாகவே சில படங்களில் நடித்து வருகிறார். அவர் மனைவி ஜீவிதா நடிப்பை விட்டு ஒதுங்கி தயாரிப்பு, டைரக்க்ஷன் என பணியாற்றி வருகிறார். பெற்றோரைப் போலவே இவர்களது இரண்டு மகள்களான சிவாத்மிகா மற்றும் ஷிவானி இருவரும், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். கடந்தமாதம் சிவாத்மிகா நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படமும், சமீபத்தில் ஷிவானி நடித்த அன்பறிவு படமும் தமிழில் வெளியானதுஇந்த நிலையில் தற்போது டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் சேகர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரது மகளாக சொந்த மகளான ஷிவானியே நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல ராஜசேகரின் மனைவி ஜீவிதா தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதைப்படி மட்டுமல்ல நிஜத்திலும் கூட இது ஒரு குடும்பப் படமாக உருவாகி வருகிறது என்று கூட சொல்லலாம்.







; ?>)
; ?>)
; ?>)