• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தொடங்கி வைத்தார் .

கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கிணங்க , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதை கடந்த இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி பணி தொடங்கி நடைபெற்று வருகிறது . அதன் ஒரு கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையேற்று, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமிபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், முன்னாள் பேரூராட்சி சேர்மன் ராமசாமி, சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.