• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திமுகவில் இணைந்த அதிமுக, அமமுகவினர்

ஊராட்சி மன்ற தலைவர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில், மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர், தொழிலதிபர் ஆர்.ராம்குமார் தலைமையில் மேலக்கலங்கல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக,அமமுகவினர், அக்கட்சியிலிருந்து விலகி, தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், ஆலங்குளம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செல்வக்கொடி, ராஜாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.