• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஆஸ்கார் வென்ற முதல் கறுப்பின நடிகர் காலமானார் பார்த்திபன் இரங்கல்

பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (94) காலமானார். கறுப்பினத்தை சேர்ந்த சிட்னி பைய்டியர் தனது நடிப்பு திறமையால் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான ‘லிலிஸ் ஆஃப் தி பில்ட்’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சிட்னி பைய்டியருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் சிட்னி பைய்டியர் (94) நேற்று (7.1.2022) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிட்னி பைய்டியர் மறைவுக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,” சிட்னி பைய்டியர் கருப்பின நடிகர்களில் ஆஸ்கர்-தொட்டவர் வியாபார சந்தைக்குள் சமரசம் கொள்ளாமல் கௌரவமான பாத்திரங்களில் (அன்றைய கருப்பின மக்கள் வெள்ளைகளின் அடிவருடிகளாக இருந்தபோது) முத்திரை பதித்தவர் பெருமை, ஆயிரம் மைல்கள் கடந்து என்னை போல் ஒரு தமிழ் மாநிறத்தவன் இரங்கல் பதிவிடுவது” எனக் குறிப்பிட்டுள்ளார்.